கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு!

0

 


அபு அலா - 


கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (14) இடம்பெற்றபோது அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். 



கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மதஸ்த்தலங்களுக்கு இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கும் காஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்துள்ளார். 


இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், பிரதம செயலாளர், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரச அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top