M.S.M.தமீம்
இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தாசேனை பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் நேற்று இரவு(15) இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் 20ற்கும் 22 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி J.M. சேனரத்த அவர்களின் பணிபுரையின் கீழ்
போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கலன் சூரிய (பொலிஸ் பரிசோதகர் ) அவர்களின் தேடுதல் வேட்டையில் இவ்விரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு அம்பாறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று (16) அழைத்துச்செல்லப்பட்டதாக
இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி J.M.M சேனரத்தன today ceylon ஊடகத்திற்கு தெரிவித்தார்.

