நாம் போராட வேண்டியது சிங்களவர்களுக்கு எதிராக அல்ல. வெள்ளாளியத்துக்கு எதிராகவே.!

Dsa
0

 




"சாதிக்கொடுமைகள் வேண்டாம்"

வட மாகாணத்தில் அதாவது

யாழ்ப்பாணம் கிளிநொச்சி,

முல்லைத்தீவு, வவுனியா,மன்னார் ஆகிய

 பிரதேசங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட

தமிழ் மக்களை தேசவழமைச் சட்டத்தின்

8 ஆம் சரத்து அடிமைகள் எனக்

கூறுகிறது. 


முக்கியமாக நான்கு சாதிகளை இச்சட்டம்

அடிமைகள் என வரையறை செய்தது.

கோவியர், சான்றார் , நளவர், பள்ளர், அச்

சட்டத்தில் அடிமைகள் என

குறிப்பிடப்பட்டனர். ஆயினும்

கோவியரும் சான்றாரும் வெள்ளாளரின்

வீடுகளில் குடிமைகளாக பணிக்கு

அமர்த்தப்பட்டனர். 


ஆனால் நளவரும் பள்ளரும் மிக

மோசமான அடிமைகளாக

ஒடுக்கப்பட்டனர். அத்தோடு அம்பட்டர் ,

வண்ணார், பறையர் , நளவர், பள்ளர்

எனப்படும் ஐந்து சாதிகளைத் பஞ்சமர்

எனக் கூறி தீண்டத்தகாதவர்களாக

வெள்ளாளியம் நடத்தியது.  


1707 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்

நிர்வாகத்தில் இருந்த 12 வெள்ளாளிய

முதலியார்களின் துணை கொண்டு

ஒல்லாந்தர்களால் உருவாக்கப்பட்ட தேச

வழமைச்சட்டத்தின் 8 ஆம் சரத்து மூலம்

எமை அடிமைகளாக்கிய வெள்ளாளியம்,

பஞ்சமர் சாதிகளின் கல்வி,

பொருளாதாரம், கலை கலாச்சாரம், சமூக,

அரசியல் உரிமைகள் அனைத்தையும்

சட்டத்தால் பறித்தது. தமது

காணிகளிலும் வயல்களிலும் எம்மை

கொத்தடிமைகளாக வைத்திருந்தது.

எமது பெண்களை கற்பழித்தது. எமது

பெண்களை தமது பாலியல்

வக்கிரங்களுக்கு பாலியல்

அடிமைகளாகப் பயன்படுத்தியது.

சங்கிலிகளில் பிணைத்து

விலங்குகளிலும் கீழாக நடத்தியது. எமது

உழைப்பை பல நூற்றாண்டுகளாகச்

சுரண்டியது. எமது உழைப்பின் மூலம்

வெள்ளாளியம் ஒரு பன்றியைப் போல

வீங்கிப் பெருத்தது. 


அமெரிக்க அடிமை முறைக்கு ஒப்பான

தேசவழமைச்சட்டத்தின் 8 ஆவது

சரத்தின் கொடுமையை கண்ட

பிரித்தானியர்கள் தமது

ஆட்சிக்காலத்தில் 1844 ஆம் ஆண்டு

இலங்கையில் அடிமைமுறை ஒழிப்பு

சட்டம் கொண்டுவந்தார்கள். ஆயினும்

பல நூற்றாண்டுகளாக கல்வி

மறுக்கப்பட்ட பஞ்சமர் சாதி சமூகத்திற்கு

தான் சட்டத்தினால் இனியும்

அடிமையில்லை என்பதைத்

தெரிந்துகொள்ளவே இன்னொரு

நூற்றாண்டு சென்றது. 


சட்டத்தினால் அடிமை முறை 1844 இல்

ஓழிக்கப்பட்ட போதும் 1957 ஆம் ஆண்டு

பண்டாரநாயக்க ஆட்சியில் சமூக

குறைபாடுகள் ஒழிப்பு சட்டம் எனப்படும்

சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான சட்டம்

கொண்டுவரப்படும் வரை

வெள்ளாளியம் எம்மை அடிமைகளாகவே

நடத்தியது. 1944 ஆம் ஆண்டு

சிங்களவரான கன்னங்கர அவர்கள்

இலவச கல்வியை இலங்கையில்

நடைமுறைப்படுத்தப்படும் வரை எமக்கு

தமிழ், வெள்ளாளிய , சாதி இந்துப்

பாடசாலைகளில் கல்வி

மறுக்கப்பட்டேயிருந்தது. 


எம்மை எந்த இந்துக்

கோயில்களுக்குள்ளும் 1956 இற்கு

முன்னர் வெள்ளாளியம்

அனுமதிக்கவேயில்லை. நல்லூர்

கோயிலுக்குள் பஞ்சமர் சாதியினர் 1956

ஆம் ஆண்டே அனுமதிக்கப்பட்டனர்.

அதுவும் மேல்சட்டை அணியாமல் செல்ல

வேண்டும். 1967 ஆம் ஆண்டு

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குள்

பலாத்காரமாக வன்முறை மூலமே

பஞ்சமர் சாதிகள் உள்நுழைந்தனர். அந்த

நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினரான

அடங்காத் தமிழன் எனப் பெயர் பெற்ற

சுந்தரலிங்கம் பஞ்சமர் சாதிகளுக்கு

எதிராக சாதிய வன்முறையை தூண்டிய

குற்றத்துக்காக சமூக குறைபாடுகள்

சட்டத்தினால் தண்டிக்கப்பட்டார். 


இவ்வாறான சாதிய வெறியர்களாகவே

தமிழ் தேசிய அரசியல் ஓநாய்களான,

கட்சித் தலைவர்கள் பொன்னம்பலம்

முதற்கொண்டு செல்வநாயகம்,

அமிர்தலிஙலகம் வரை அனைவரும்

செயல்பட்டனர். இவர்கள் எமது

பிரதிநிதிகள் அல்ல. எம்மை

அடிமைகளாக வைத்திருந்த

வெள்ளாளியத்தின் பிரதிநிதிகள்

இவர்கள். 


எம்மை ஒடுக்கிய இவர்களுடைய

போலித் தமிழ் தேசிய கட்சிகளுக்காக

இன்று உழைக்கும் பஞ்சமர் சாதிகளைச்

சேர்ந்த ஒவ்வொருவரும் தமது

வரலாறுகளைத் தெரிந்து கொள்ளும்

போது இக்கட்சிகளைத் தூக்கி

எறிவார்கள் என்பது நிச்சயம். 


மோகனதாஸ் காந்தியும் புரட்சியாளர்

அண்ணல் அம்பேத்கரும்

முதல்முறையாக சந்திக்கும் போது காந்தி

அம்பேத்கரிடம் “காங்கிரஸின்

போராட்டத்தை விமர்சிப்பது ,

தாய்நாட்டிற்கான போராட்டத்தை

விமர்சிப்பதற்கு ஒப்பானது என

கூறினார். அதற்கு புரட்சியாளர்

அண்ணல் அம்பேத்கர்,

“ காந்திஜி , தன்மாணமுள்ள எந்தத்

தீண்டத்தகாதவனும் இந்த நாடு குறித்துப்

பெருமை கொள்ள மாட்டான், ஆகவே

எனக்கு தாய்நாடு என்று ஒன்றில்லை”

என்றார். 

ஆதாரம்—- அம்பேத்கரின் சாதியை

அழித்தொழித்தல். (Annihilation of Caste )

பக்கம் 41.


பின்குறிப்பு - அருண் சித்தார்த் ஈழப்

போராட்டத்துக்கு எதிரானவர் , தமிழ்

தேசியத்துக்கு எதிரானவர், இனத்

துரோகி இவர் என என் எதிரிகள் என் மீது

முன்வைக்கும் குற்றச் சாட்டுகளுக்கு என்

பதிலும் அம்பேத்கர் அன்று காந்திக்கு

கொடுத்த பதிலேயாகும்.


“ தன்மாணமுள்ள பஞ்சமர் சாதிகளைச்

சேர்ந்த எந்த நளவனும் , பறையனும் ,

பள்ளனும், வண்ணானும், அம்பட்டனும்

இந்த தமிழ் தேசியம் குறித்து பெருமை

கொள்ளமாட்டான். இந்தப் போராட்டமும்

தேசியமும் எமக்கானதல்ல. இது

வெள்ளாளியத்துக்கானது. ஆனால்

சூட்சுமமாக வெள்ளாளியம் எம்மை

இந்தப் போராட்டத்துக்குள் தள்ளிப்

பலியிட்டது. எமக்கு தமிழ் தேசம் என்று

எதுவும் இல்லை. எமக்கு ஈழம் தாய்நாடு

அல்ல. நாம் போராட வேண்டியது

சிங்களவர்களுக்கெதி்ராகவல்ல,

வெள்ளாளாளியத்துக்கெதிராகவே.”


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top