கிழக்கு மாகாணக் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக் குழு உறுப்பினரும், டுடே சிலோன் ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளருமான நூருல் ஹூதா உமர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற "அகாசா" நிறுவனத்தினால் ஸ்ரீலங்கன் டொப் 100 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
15 வருடங்களாக ஊடகத்துறை யில் பணியாற்றிவரும் இவர் ஆய்வுக் கட்டுரைகளை வரைவதிலும், சமூகப் பிரச்சினைகளை துணிச் சலுடன் ஊடகங்களுக்கு அறிக் கையிடுவதிலும் முன்னிலை வகிக்கும் ஒருவராவார் . அரசியல் . சமூக, சமய , பொருளாதார பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் இவர் ஊடகத்துறைக்காக இந்த ஸ்ரீலங்கன் டொப் 100 விருதைத் தனதாக்கியுள்ளார். இவரை எமது ஊடக வலையமைப்பு சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
இந்த நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ் . நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர , இலக்கியப் புரவலர் காஸிம் உமர் . இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்க . மதகுருமார்கள் . ஊடக நிறுவனப் பிரதானிகள் . பத்திரிகை ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
