கொழும்பு - ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றையதினம்(31.05.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை, சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் வசிக்கும் நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை
கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

