ஒடிசா ரயில் விபத்து குறித்து நடிகை பிரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு கோரமண்டல் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திரைத்துறையை சார்ந்த பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட சில அமைச்சர்கள் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.
மேலும் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஆயிரத்துக்கும் மேர்பாட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பெருமாளில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது.
