மாட்டிறைச்சியின் விலைகள் நிர்ணயிக்கப்படாமை மற்றும் விலைப்பட்டியல்காட்சிப்படுத்தாமை தொடர்பில் மக்கள் முறைப்பாடு

Dsa
0

 


இறக்காமம் பிரதேச சபைக்குற்பட்ட மாட்டிறைச்சிக் கடைகள் தான்தோன்றித்தனமாக நடப்பதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.


அண்மைக்காலமாக இறைச்சிக்கடைகளில் அளவை நிறுவைகள், விலைகள் என்பவற்றில் கடும் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.


தனி இறைச்சி 01Kg ரூபா. 2200.00 வுக்கும் முள்ளுடன் (இறைச்சி 750g + முள்ளு 250g) ரூபா. 2000.00 விற்கும் விற்கப்படுகின்றது.


மேலும் எந்தவொரு கடைகளிலும் முறையாக காட்சிப்படுத்தப்படவில்லை. இறைச்சிகளில் காணப்படும் கழிவுகளும் சரியாக சுத்தம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுகின்றது.


இது தொடர்பில் பிரதேச சபையோ பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுகர்வோர் அதிகார சபை என்பன கண்டுகொள்வதாக இல்லை.


இறக்காமம் பிரதேச சபையினால் 01Kg இறைச்சிக்கான விலை நிர்ணயிக்கப்படாமல் விலை மணு கோரப்பட்டு இறைச்சிக் கடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடை உரிமையாளர்கள் தாம்விரும்பிவாறு விலைக் கட்டுப்பாடு இறைச்சியை விற்பனைசெய்து வருகின்றனர்.


எனவே இவற்றுக்கெதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூராட்சி மாகாண ஆணையாளருக்கு பிரதியிட்ட பொதுமக்கள் மணு இன்று 2023.05.22 ஆம் திகதி பிரதேச சபை செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. 


இதுதொடர்பில் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபை செயலாளர் மணுதாரர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உரிய தீர்வு வரும் வரைக்கும் பிரதேச சபையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்தனர்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top