லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி..!

Dsa
0




லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். அர்ஜென்டினா, அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி உலகின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது. மெஸ்சியின் உலக கோப்பை கனவு கடந்த ஆண்டு நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது. 35 வயாதான மெஸ்சி கடந்த ஆண்டு பிபா உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.


இந்நிலையில், லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பாரிஸில் நடந்த விழாவில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். அதைபோல லாரஸ் உலகின் சிறந்த அணிக்கான விருது அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. லாரஸ் விருதை 2-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top