முசுமுசுக்கை கீரையின் அற்புத மருத்துவ பயன்கள்

Dsa
0

 


முசுமுசுக்கை கீரை கொடி வகையைச் சேர்ந்த ஒரு கீரையாகும். முசுமுசுக்கை கீரையானது துவர்ப்பு, மற்றும் கார்ப்புச் சுவையுடனும், வெப்பத் தன்மையும் கொண்டது. முசுமுசுக்கை கீரையின் இலை மற்றும் வேர் மருத்துவ குணம் கொண்டவை.


முசுமுசுக்கை கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது. 

 

முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘சி’ ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.


முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் சளி, கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும். முசுமுசுக்கையானது மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 

முசுமுசுக்கை கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும். காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் நாவானது சுவையை இழந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உண்டால் நாவில் ஏற்பட்ட சுவையின்மை நீங்கும்.

 

கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழ்கினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


முசுமுசுக்கையானது இளநரையை கட்டுபடுத்தும், காச நோயை குணபடுத்தும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் முசுமுசுக்கையை எடுத்து கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

 

முசுமுசுக்கை வாந்தியை கட்டுப்படுத்தும். சளி, இருமல், இரைப்பை நோய்கள் குணமாகும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். முசுக்கையானது நுரையீரல், சுவாசக் கோளாறு, சுவாசப்பையில் உண்டாகும் கபத்தை அகற்றும்.

 

முசுமுசுக்கை தைலம் உடல் சூட்டை தணிக்கும். கண் எரிச்சல் போக்கும். முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து நெய்யில் வதக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top