ஐரோப்பிய நாடான குரோசியாவில் பெய்த கனமழையால் ஆற்றின் கரைகள் உடைந்தன; நகருக்குள் வெள்ளம் பாய்ந்தோடியதால் மக்கள் கடும் சிரமம்

Dsa
0

 



ஐரோப்பிய நாடான குரோசியாவில் பெய்த கனமழை காரணமாக ஆற்றின் கரைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் பாய்ந்தோடியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். குரோசியா நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 40 மி.மீட்டர் வரை மழை பொழிந்த நிலையில் ஓப்ராவாக் நகரில் பெய்த கனமழையால் அங்கு பாயும் ஜெர்மஞ்சா ஆற்றின் கரைகள் உடைந்துவிட்டன.


இதனால் நகருக்குள் ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வீடுகள், கடைகள் நீரில் மூழ்கின. ஆற்றின் கரைகளில் மணல் மூட்டைகளை வைத்து அடைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு குரேசியா பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top