பொதுக் கூட்டமைப்புக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி

Dsa
0

 


அரசியல் மேடையில் பொதுக் கூட்டமைப்பு ஒன்றுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தமது நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.


அரசியலமைப்பு திருத்தங்களுக்கு பின்னர் சாத்தியமான ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த ஆண்டு ஒரு வலுவான வாய்ப்பாக இருப்பதால், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாய்ப்புக்களும் அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் என்ற அடிப்படையில் தேர்தல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த ஏற்பாடு தேவை என்பது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சிந்தனையாக உள்ளது.


இந்தநிலையில் ஒரு புதிய அரசியல் தளத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்பட மற்ற எதிர்க்கட்சிகளுடன் தாங்கள் விவாதித்து வருதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top