அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Dsa
0

 



பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி - எல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்து இன்றைய தினம் (14.05.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹாலி - எல பிரதேசத்தில் உள்ள தோவ ரஜமஹா ஆலய ஊர்வலத்தில் கலந்துகொண்ட நடனக் குழுவின் மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


காயமடைந்தவர்களில் 8 மாணவிகளும், 2 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் அடங்குவதாகவும் அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top