அத்திப்பழம் ஓர் விசித்திர மருந்து

Dsa
0

 



அத்தி ஒரு மரவகையை சார்ந்தது. இந்த மரமானது சுமாராக 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இந்த அத்திப்பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டது.

அத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. உதாரணமாக, நல்ல அத்தி, நாட்டு அத்தி, வெள்ளை அத்தி என பலவகைகள் உள்ளன.

இந்த அத்தி மரத்தின் பட்டையானது சாம்பல் மற்றும் சிவப்பு என இருநிறங்களில் காணப்படும்.

பொதுவாக ஆண்டுக்கு இருமுறை அறுவடை செய்யப்படும் அத்தியில் பெரும்பாலும் மலர்களை நம்மால் காண முடிவதில்லை.

பொதுவாக, அத்திமரத்தில் பழமானது தண்டு, கிளை மற்றும் மரத்தின் அடிபாகத்தில் கொத்துகொத்தாக காய்க்க தொடங்கும்.

இந்த அத்திப்பழமானது நீளமுட்டை வடிவில், பெரும் நெல்லி அளவில் இருக்கும்.

அத்தியானது பழுக்க ஆரம்பித்தவுடன், பச்சை நிறத்திலிருந்து வெளிறிய சாம்பல் நிறத்திற்கு மாறும். அத்திப்பழத்தின் உட்புறமானது சிவந்து காணப்படும்.

அத்திப்பழமானது பழுத்தவுடன் தானாகவே உதிர்ந்து விழுந்து விடும். இந்த அத்திப்பழம் மிகுந்த மணத்துடன் இருக்கும்.

ஆனால் இதனை பிட்டு பார்த்தால் சிறிய பூச்சிகளும், புழுக்களும் இருக்கும்.

இதனை கருதியே "அத்திப்பழத்தை பிட்டு பார்த்தால் அவ்வளவும் சொத்தை" எனக் கிராமங்களில் பழமொழி கூறுவார்கள். இந்த அத்திப்பழத்தை பதப்படுத்தாமல் உண்பது கடினம்.

சங்கக்காலங்களில் அத்தி

நமது வரலாற்றை பெரும்பாலும், ஓலைச்சுவடிகள் மூலமாக அறிந்து வருகிறோம்.

அந்த வகையில் சங்கக்காலத்தில் அத்திப்பழத்தை பற்றிய ஒரு குறிப்பு உள்ளது.

ஒரு ஆற்றுக்கரையில் இருந்த அத்திமரத்தில் இருந்து விழுந்த அத்திப்பழத்தை 7 நண்டுக்கள் அதை மிதித்துக்கொண்டே இருந்தனவாம்.

அதை மனதில் கருதிய காதலி, தனது காதலனை எவரேனும் தவறாக பேசுவாராயின், அவர்களது நாக்கை அத்திப்பழத்தை 7 நண்டுகள் மிதித்தாற்போல் துன்புறட்டும் என சாபம் கொடுத்தாள் எனக் கூறுகிறது.

அத்திப்பழத்தின் சங்கக்காலப்பெயர்

அத்திப்பழத்தை சங்கக்காலங்களில் அதவம் பழம் எனவும், மரத்தை "அதவம்" எனவும் அழைத்து வந்தனர்.

அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்

அத்திப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த சத்துக்களால், இதை பெரும்பாலும் மக்கள் விரும்பி உண்டு வருகின்றனர்.

பொட்டாசியம்,


கால்சியம்,


இரும்பு,


நார்ச்சத்து,


புரதம்,


சர்க்கரை,


பாஸ்பரஸ்,


மாங்கனீஸ்,


வைட்டமின் பி6, ஏ, சி


கலோரிகள்.

ஆராய்ச்சியாளர்கள் அத்திப்பழத்தை ஆராய்ந்ததில், மற்ற பழங்களை காட்டிலும், இந்த பழத்தில் சுமார் நான்கு மடங்கு கால்சியம், புரதம், சர்க்கரை, பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது என கண்டறிந்தனர்.

இதை தவிர வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும் இருப்பதால், அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக மாறும் எனக் கூறுகின்றனர்.

அத்திப்பழத்தின் மருத்துவப்பயன்கள்

அத்திப்பழமரத்தில் உள்ள பூக்கள், பட்டை, வேர் மற்றும் பால் என அனைத்திலும் மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளன.

இந்த அத்திப்பழத்தை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை பதப்படுத்தி சாப்பிட்டாலும் சரி, இதன் சத்துக்கள் குறைவதில்லை.

உடல் எடையை குறைக்க

பெரும்பாலோனோர் உடல் எடையை குறைக்க எண்ணி கடுமையான உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள்.

இதனால் அவர்களது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் ஏதேனும் பக்கவிளைவுகளால் அவதிப்படுவார்கள்.

அவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடுவது மிகுந்த நன்மையளிக்க வல்லது.

உலர் அத்திப்பழத்தில் கொழுப்பும், கலோரியும் குறைவாக இருக்கும் என்பதால், உடல் எடையை அதிகரிக்காமல், உடலுக்கு தேவையான பல சத்துக்களை பெறலாம்.

வாய்ப்புண், ஈறுவீக்கம் மற்றும் பித்தம்

தொல்லைத்தரக்கூடிய வாய்ப்புண், ஈறுவீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் அத்தியிலையை தண்ணீரியில் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வர விரைவில் சரியாகும்.

அதுபோல, அத்தியிலையை நிழலில் உலர்த்தி, அதை பொடிச்செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரை தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி அத்தியிலைப்பொடியை சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர, பித்தம் தொடர்பான நோய்கள் நம்மை அண்டாது.

இரத்தம்

இந்த அத்திப் பழமானது பெண்களுக்கு மிகுந்த நன்மையளிக்க கூடியது.

உடலில் இரத்தம் குறைவாக உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் இரத்தசோகை உடையவர்கள், இந்த அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர விரைவில் இரத்தமானது அதிகரிக்கும்.

தினந்தோறும் மூன்றுவேளையும் ஓர் உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டு வர, இதில் உள்ள இரும்புச்சத்து காரணமாக, ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

இரத்த அழுத்தத்தை போக்கும் வல்லமையும், இந்த அத்திப்பழத்திற்கு உண்டு.

செரிமானப்பிரச்சனைகள்

நமது வயிற்றில் செரிமானம் சரியாக நடக்காத காரணத்தால், தான் மலச்சிக்கல் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளில் அவதிப்படுகிறோம்.

இந்த உலர் அத்திப்பழத்தை நாளொன்றுக்கு 3 என எடுத்துக்கொள்ளும் பொழுது செரிமான மண்டலம் ஆனது பலப்படும்.

நீண்டகாலமாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு, எவ்விதமான பக்கவிளைவும் இல்லாமல் குணப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான மருந்தாக உலர் அத்திப்பழம் உள்ளது.

அதுமட்டுமில்லாமல், கடுமையான இரத்த மூலம் உள்ளவர்கள், இந்த அத்திப்பழத்தின் பிஞ்சுகளை பொரியல் செய்து சாப்பிட்டுவர விரைவில் சரியாகும்.

இரவு நேரங்களில், 5 அத்திப்பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் விரைவில் சரியாகும். இல்லையெனில், சிறிதளவு அத்திப்பழ விதைகளை சாப்பிட்டு வந்தாலும், மலச்சிக்கல் தீரும்.

சிறுகுடல், பெருங்குடல் புற்றுநோய்

நமது சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் தங்கும் நச்சுக்களால் எண்ணற்ற நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் சிலருக்கு புற்றுநோய்க்கூட வரலாம்.

அத்திப்பழம் சாப்பிடுவதால், நமது குடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

அதுமட்டுமில்லாமல் புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும், இதில் நிறைந்துள்ளதால் புற்றுநோய் குறித்த பயமானது நம்மை நெருங்குவதில்லை.

எலும்பு

நமது எலும்பின் பலமானது, அதனது அடர்த்தியை பொருத்தே அமைகிறது.

இதன் காரணமாகவே, மருத்துவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.

இந்த அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளதால், நமது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் எலும்புகள் வலுப்பெறுகின்றன.

பெண்கள்

அத்திப்பழத்தை போலவே, அதன் பட்டை மற்றும் வேர்களில் எண்ணற்ற பயன்கள் உள்ளன.

இந்த அத்திமரத்தின் வேரை நசுக்கி, தண்ணீரில் ஊறவைத்து குடிக்க தாய்ப்பால் நன்றாக சுரக்க செய்யும்.

அதுமட்டுமில்லாமல், இந்த அத்திமரப்பாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மேகநோய், மற்றும் பெரும்பாடு போன்ற நோய்கள் தீரும்.

இந்த அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், இதயநோய், ஆண் மலட்டு தன்மை மற்றும் வெண்புள்ளி போன்ற நோய்களை நீக்கும். அதுமட்டுமில்லாமல் கல்லிரலை பலப்படுத்தும்.

மூட்டுவலிகளால் அவதிப்படுபவர்கள், இந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வர மூட்டுவலி என்ற ஒன்று உங்களுக்கு இருக்காது.

அதுமட்டுமில்லாமல், சொறி, சிரங்கு மற்றும் நமைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும், இந்த அத்திப்பழம் அருமருந்தாகும். இதுபோல எண்ணற்ற பயன்களை கொண்டுள்ளது.

பொதுவாக அத்தியில் உள்ள மெல்லிய புழுக்களால், அதை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், அதில் உள்ள மருத்துவக்குணங்கள் ஏராளம். ஆகையால், பதப்படுத்தப்பட்ட அத்தியை தொடர்ந்து சாப்பிடுங்கள். மருந்து, மாத்திரைகளை தவிர்த்திடுங்கள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top