ரமலான் முதல் எட்டு நாட்களில் 74 லட்சம் பேர் மக்கா ஹரமுக்குள் நுழைந்திருப்பதாகவும், வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் மஸ்ஜிதுல் ஹரம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புனித ரமலான் மாதத்தில் செய்யப்படும் உம்றாவிற்கு சிறப்புக்கள் இருப்பதால், சவுதிஅரேபியாவிற்கு உள்ளிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
