550 குழந்தைகளுக்கு தந்தை…! போதும் நிறுத்து! நீதிமன்றம் உத்தரவு

0

 


550-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையானதாகக் கூறப்படும் ஸ்பெர்ம் டோனரை, இனி விந்தணு தானம் செய்யக்கூடாது என நெதர்லாந்து நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட இன்றைய உலகில் கிட்டத்தட்ட அனைத்துக்குமே மாற்று (Alternative) என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதிலும் மருத்துவத்துறையில் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துவிட்டோம், ரத்த தானத்தைப் போல விந்தணு தானம் என்பது அவ்வளவு எளிதாகிவிட்டது. ஆனால், நெதர்லாந்து நீதிமன்றம் விந்தணு தானம் செய்யும் ஸ்பெர்ம் டோனர் (sperm donor) ஒருவரை இனி விந்தணு தானம் செய்யத் தடை விதித்திருப்பதன் பின்னணி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

காரணம் நெதர்லாந்திலுள்ள மருத்துவ வழிகாட்டுதலின்படி, ஒரு ஸ்பெர்ம் டோனர் 12 பெண்களுக்கு மேல் விந்தணு தானம் செய்யக் கூடாது அல்லது 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கக் கூடாது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த விவகாரத்தில் ஜொனாதன் (Jonathan) எனும் 41 வயது ஸ்பெர்ம் டோனர் கிட்டத்தட்ட 550-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top