- ஜெய்நப் முகமது சலி மற்றும் இம்மானுவேல் இகுன்ஸா
- பிபிசி நியூஸ்
- இருந்துகார்டோம் & நைரோபி
சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே எழுந்த அதிகாரப் போட்டி பெரும் மோதலாக வெடித்துள்ளது. இதில், இதில் இந்தியர் ஒருவர் உட்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கார்டோமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தைப் பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டுள்ளன.
தலைநகரில் மட்டும் 17 பொதுமக்கள் உள்பட 55 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ராணுவ ஆட்சியைக் கைவிட்டு ஜனநாயகத்திற்கு திரும்பலாம் என்ற முன்மொழிவே இந்த மோதலுக்குக் காரணம்.

