துப்பாக்கிச் சூடு; 45 வயது நபர் பலி

0

 - ஓய்வு பெற்ற இராணு சிப்பாய் கைது

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜபக்ஷபுர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சீதுவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



நேற்றிரவு (14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் சீதுவை, ராஜபக்ஷபுர பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் காரணமாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top