14 வயதில் 7 சர்வதேச விருதுகள்

Dsa
0

 



பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் 14 வயது மகன் அமீர் ஹம்சா பஞ்சாரி, உலக அறிஞர் கிண்ண போட்டியில் ஏழு சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.


இறைவன் கொடுத்த திறமைகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உலகளவில் பிரபலமாகும் இளைஞர்களில் 14 வயது முஹம்மது ஹம்சாவும் ஒருவர்.


அஜர்பைஜானில் நடைபெற்ற உலக அறிஞர் கிண்ண போட்டியில் எழுத்து மற்றும் விவாதத்தில் 4 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று பெற்றோரையும் பெருமைப்படுத்தினார் ஹம்சா.


கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் எனது பெற்றோரின் ஊக்கமும் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததாக ஹம்சா கூறியுள்ளார்.


அமீர் ஹம்சாவின் தந்தை முஹம்மது ஆரிப் தொழிலில் ஒரு மீனவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மகனின் வெற்றியைக் கண்டு அவர் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் விட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சாதிக்க முயற்சி் செய்தால் உங்களாலும் முடியும்.. முயற்சியே முக்கியமானது. 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top