உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் 2023 தற்போது 2023.03.09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணைப்படி . உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் 38 ( 3 ) ஆம் பிரிவிற்கமைய திகதியை நீடிப்புச் செய்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை நடாத்துவதற்கான நீடிப்புச் செய்யப்பட்ட திகதியைத் தீர்மானித்து 2023.03.03 ஆம் திகதி அதாவது இன்றைய தினம் அறிவிக்க ஏற்பாடாகியிருந்தபோதிலும்,
இன்றைய தினம் கனம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட SC / FRA / 69 / 2023 ஆம் இலக்க வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் நிதி அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான கலந்தாலோசனையுடன் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்குப் பொருத்தமான ஒரு திகதியைத் தீரமானித்து 2023 மார்ச் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடாத்துவதற்கான திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கப்படுமென்பது இத்தால் அறிவிக்கப்படுகின்றது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனது ஊடக அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.
