Haseem Sajeeth (MO)
இறக்காமம் பொலிஸ் பிரிவில் #குளத்தாவளி சந்தி அக்கரைப்பற்று பிரதான வீதியில் கரும்பு பெட்டியில் மோட்டார் சைக்கிள் மோதி நபர் ஒருவர் இன்று (17) இரவு விபத்துக்குள்ளானார்.
சீக்கன் கரும்புடன் அதிக பெட்டிகளை இரவு நேரத்தில் இழுத்துக் கொண்டு சென்ற டில்லர் பெட்டியில் பின்னோக்கி வந்த மோட்டார் சைக்கிள் நபர் ஒருவர் விபத்துக்குள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக அம்பார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று இரவு நேரங்களில் கரும்பு பெட்டிகளுடன் தொடர்ச்சியான விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.
குறித்த விபத்து தொடர்பாக இறக்காமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

