கடன் மறுசீரமைப்பு மூலம் எத்தரப்பும் அனுகூலத்தை எட்டாதென்கிறார்: ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Dsa
0

 




இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில், எந்தவொரு தரப்புக்கும் அனுகூலமான முறையில் நடந்து கொள்ளப் போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.


கேகாலை - எட்டியாந்தோட்டையில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், அனைத்து தரப்பினரதும் பொது இணக்கப்பாட்டுடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பமாகும்.


எனவே எந்தவொரு தரப்புக்கும் விசேட அனுகூலம் வழங்கப்படாத வகையில், சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து புரிந்துணர்வுடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top