நிலநடுக்கம் தொடர்பாக

0


கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற சொற்பிரயோகங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக இடம்பெற்று வருகின்றமை காரணமாக பொதுமக்கள் பலர் தேவையற்ற பீதி அடைவதாக அறிய கிடைக்கின்றது.

 

நிலநடுக்கத்தினால் பாதிப்பு ஏற்படுவதோ அல்லது கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தினால் சுனாமி அலை உருவாவதோ அந்த நிலநடுக்கத்தின் அளவிலும் அந்த நிகழ்வு இடம்பெறும் ஆழத்திலுமே தங்கி உள்ளது.
நிலநடுக்கத்தின் அளவு 5.0 ரிச்சர்ட் அளவிற்க்கும் பெரும்பாலும் 6.0 ரிச்சர்ட் அளவிற்கும் அதிகமாக ஏற்பட்டாலே பாரிய சேதங்களும் தாக்கங்களும் ஏற்படும்.

 

அதற்கு குறைவான சிறிய நில அதிர்வுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை.
அதுமட்டுமல்லாது இனிமேல் 6.0 ரிச்சர்ட் அளவிற்கு குறைந்த அளவுடைய சிறிய நிலநடுக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை நான் நமது இந்த வாட்ஸ் அப் குழுமத்தில் பதிவிடுவதை தவிர்க்கலாம் என நினைக்கின்றேன்.
அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்கள் மீது தேவையில்லாத பீதியை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக இதனை செய்யலாம் என நினைக்கின்றேன்.
நன்றி.
க.சூரியகுமாரன்,
முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top