ஜப்பானுக்கு உடனடிப் பயணம் என்று சொல்லி கொள்ளை இலாபம் பெறும் தரகர்களும் முகவர்களும்

0

 



இளைஞர்களை இலக்கு வைத்து தற்போது நடந்து கொண்டிருக்கும் ஜப்பானிய காய்ச்சலானது முகவர்களினுடைய தில்லு முல்லான பணக் கொள்ளையாகும் என்பதை விழிப்புணர்வூட்டுவதற்கான பதிவே இதுவாகும்.


எமது பகுதிகளிலிருந்து 90 நாட்களை கொண்ட ஜப்பானிய அகதி விசாவினை அடிப்பதற்கான ஆரம்ப தொகையாக சில முகவர்கள் இரண்டு இலட்சம் வரை விசாவிற்காக செல்லும் இளைஞர்களிடம் வாங்கும் அபல நிலை உண்டு.உண்மையில் 90 நாட்களுக்கான ஜப்பானிய விசாவினை பெறுவதற்காக செலவு செய்ய வேண்டிய தொகை எவ்வளவு?என உங்களுக்கு தெரியுமா?


ஜப்பானில் இருந்து வரும் sponsorship கடிதத்திற்கு post கட்டணத்தோடு சேர்த்து அண்ணளவாக 5000/= எம்பசில் அண்ணளவாக 10000/= 

Documents translation கட்டணம் 5000/=

மொத்தமாக 20000/= இலங்கை ரூபாவினை செலவு செய்ய வேண்டியேற்படும்.(விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு)


சாதாரணமாக ஒரு விசாவிற்கு 100000/= வாங்கினாலும் 80000/= அவர்களுக்கு இலாபமாக இருக்கும்.(விசாவிற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டாலும் இந்த தொகை கிடைக்கும்)


சாதரணமாக ஒரு நாளைக்கு 20 விண்ணப்பத்தை விசாவிற்காக எம்பசிக்கு போடும் போது அவர்களுக்கு கிடைக்கின்ற தொகை 80000 ×20 = 1600000/=(பதினாறு இலட்சம் ரூபா)


விசாவிற்கு விண்ணப்பித்து அது அங்கீகரிக்கப்பட்டால் ஜப்பானிலிருந்து sponsorship நிற்பவருக்கு முகவர்கள் செலுத்தும் பணம் அண்ணளவாக மூன்று இலட்சத்துக்கு உட்பட்டதாகும்.


உதாரணமாக 10 விசாவிற்கு விண்ணப்பித்து 5 அங்கீகரிக்கப்பட்டால் அதற்காக அவர்கள் ஜப்பான் sponsorship க்கு வழங்கும் தொகை 300000 ×5 = 1500000/= ஆனால் நடப்பது என்ன?


அக்குறணை,பேருவளை போன்ற இடங்களில் உள்ள முகவர்கள் 100000/=(பத்து இலட்சம் வரை வாங்குகிறார்கள்) ஒரு விசாவில் 700000/=(ஏழு லட்சம்) 700000 ×5 =3500000/= (முப்பத்தைந்து இலட்சம் )

5 பேரை அனுப்பினால் அவர்களுக்கு முப்பத்தைந்து இலட்சம் கிடைக்கும்.


அக்குறணை,பேருவளையில் உள்ள முகவர்களை எம்மவர்கள் அணுகி இங்கிருந்து செல்வோரிடம் 2000000/=(இருபது இலட்சம்) வரை வாங்குகிறார்கள். ஆகவே ஜப்பான் அகதி விசா என்பது ஏமாற்று வேலை .


நீங்கள் அகதி விசாவில் போக வேண்டுமென ஒற்றைக் காலில் நின்றால் ஜப்பானில் யாராவது தெரிந்தவர்கள் நின்றால் அவர்கள் மூலம் sponsorship எடுத்து செல்வது 500000/= மாத்திரமே செலவாகும்.

சரி இவற்றை எல்லாம் தாண்டி வீசா கிடைத்து ஜப்பான் நாட்டில் போய் இறங்கினால் அங்குள்ள சில இலங்கையர்கள் செய்யும் வேலை பரிதாபம்


விசா கிடைத்து செல்வோரை விமான நிலையத்தில் வந்து கூட்டிச் செல்ல ஒரு கட்டணம்,அவர்களுக்கு அறைகளை எடுத்துக் கொடுக்க ஒரு கட்டணம்,வேலை எடுத்து தருவதாக கூறி ஒரு கட்டணம்,இப்படி அங்கு செல்பவர்களை அங்குள்ள இலங்கையர் சிலர் ஏமாற்றி பணம் சம்பாதித்து கொள்கிறார்கள்.


நாம் உங்களுக்கு கூறும் அறிவுரை சரியான திட்டமிடல் இல்லாமல் ஜப்பான் நாட்டிற்கு போகாதீர்கள்.அங்கு எல்லாவற்றையும் தயார் செய்த பிறகு நல்லவர்கள் இருந்தால் அவர்கள் உதவி மூலம் போய் சேருங்கள்.இல்லையேல் இதற்காக செலவு செய்யும் காசை நாட்டில் வைத்து சுய தொழிலை ஆரம்பியுங்கள்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top