விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்! (Video)

0

மிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தமிழ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் பகீர்த் தகவலை வெளியிட்டுள்ளார். 

தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார்.  பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார்

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்! (video) | Ltte Leader Prabhakaran Not Dead Pazha Nedumaran

பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டுவிட்டது. நாம் அவருடன் தொடர்பில் தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.

பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார். மேலும் பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். ஆனாலும் பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது.

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்! (video) | Ltte Leader Prabhakaran Not Dead Pazha Nedumaran

தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.

இந்தியாவிற்கு எதிரான நாடுகளுக்கு அனுமதியில்லை

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்! (video) | Ltte Leader Prabhakaran Not Dead Pazha Nedumaran

தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.

இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.

சீனாவின் பிடியில் சிக்கப்போகும் இந்துமா சமுத்திரம்

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனே இருக்கின்றார்- தமிழ் நாட்டிலிருந்து வெளியான பகீர்த் தகவல்! (video) | Ltte Leader Prabhakaran Not Dead Pazha Nedumaran

தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமா கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். 

இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத்தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம்” எனவும் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top