கள்ளக்காதலை கைவிட மறுத்த டீச்சர் மனைவி.. கணவன் கொடுத்த அதிரடி தண்டனை!!

0

 தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் மங்கால்பேட்டை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ராஜீ. இவரது மனைவி மங்கால்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இதேபள்ளியில் நாகேந்தர் என்கிறவர் இயற்பியல் பாடப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே ஆயுதப்படை காவலர் மனைவியான அரசுப்பள்ளி ஆசிரியைக்கும் நாகேந்திராவுக்கும் கடந்த இரண்டாண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

இதையறிந்த ஆயுதப்படை காவலர் ராஜீ, தனது மனைவியின் தகாத உறவை கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி எச்சரித்துள்ளார். மேலும், மனைவி பணிபுரியும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் ஆசிரியர்கள் இருவரையும் அழைத்து கண்டித்த தலைமை ஆசிரியர், ஆயுதப்படை காவலரின் மனைவியை கொத்தகுடா பகுதிக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், கணவனின் கண்டிப்பையும் மீறி நாகேந்திரபாபுவுடன் ஆசிரியை நெருக்கமாக பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை கண்ட நாகேந்தர், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைகளை கயிற்றால் கட்டி, கிராமத்தை சுற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு நல் ஒழுக்கங்களை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்துக் கொண்டு கணவரால் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top