வீதிக்கு கௌரவமளித்த விஞ்ஞாபனத்தின் விளைவு வெற்றியே!

0

 


இறக்காமத்தின் நீண்ட காலமாக புரையோடிப் போயிருந்த தேவை தற்போது நிறைவேறியது.


இறக்காமம் பிரதான வீதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பல வருட காலமாக செயல்பட்டு வந்த நிலையில் 



இறக்காமம் தேசிய காங்கிரஸின் பிரதேச அமைப்பாளர் கே.எல் சாமீம் அவர்களின் அயராது விடா முயற்சியின் காரணமாக தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பின் மாகாண சபையின் கீழ் இருந்த வீதி மத்திய அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.



இவ்வீதியானது நியுகுண இறக்காமம் பிரதான வீதி ஊடாக

நல்லதண்ணிமலை

மாணிக்கமடு வரை இதன் பின் இறக்காமம் பிரதான சந்தியிலிருந்து வரிப்பத்தான்சேனை சந்தி வரையும் கொண்டுவரப்பட்டு விசேட வருத்தமானி ஒன்றும் நேற்று (10) வெளியானது.



இறக்காமம் பிரதேசத்தின் பொதுத் தேவையென உணர்ந்து வரலாற்றுக் கடன் தீர்த்த A.L.M அதாஉல்லாஹ் அவர்களுக்கும் இப்பிரதேசத்தின் தேசிய காங்கிரஸ் அமைப்பாளர் கே.எல் சமீம் அவர்களுக்கு இப்பிரதேச மக்கள் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top