துருக்கியில் இலவச வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் போலியான பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தமை இன்று கொழும்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு இன்று இலங்கை முழுவதிலும் இருந்து சுமார் 1000 பேர் கொழும்புக்கு சென்ற நிலையில், ஏமாற்றத்தில் வன்முறை வெடித்ததுடன் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

