யாழில். நாய்களை விழுங்கிய முதலை மடக்கி பிடிப்பு!

0

 



யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய முதலை எட்டடி நீளமான முதலையை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர். 


சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றினுள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உட்புகுந்த சுமார் எட்டடி நீளமான முதலை நாய்கள் இரண்டை விழுங்கி விட்டு அசையமுடியாத நிலையில் அங்கேயே உறங்கியுள்ளது. 



விடுதி பணியாளர்கள் காலையில் நாய்களை காணவில்லை என தேடிய போது , விடுதி வளாகத்தில் முதலை ஒன்று உறக்கத்தில் இருப்பதனை கண்ணுற்றுள்ளார்கள் 


பின்னர் அயலவர்களின் உதவியுடன் முதலையை உயிருடன் பிடித்து மரமொன்றில் கட்டி வைத்த்ததுடன் அது தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து , அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை  மீட்டு சென்றுள்ளனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top