பாதீட்டில் பறிபோனது சபை; மூச்சுத்திணறும் மு.கா

0

 



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கீழ்  நிர்வகிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஆதரவினை வழங்குவது கட்டாயமெனவும் கூறி,  கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராக ரவூப் ஹக்கீம் அவர்களால் கடந்த 2022.12.12 ஆம் திகதி கடிதங்கள் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 



அந்தவகையில் குறித்த கடிதம் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இருந்தாலும் கூட, குறித்த கபையின் பாதீடு நேற்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கட்சியின் உறுப்பினர்கள் மூவர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்து, பாதீட்டின் முதலாம் வாசிப்பை தோற்கடித்துள்ளதுடன், கட்சித்தலைவரின் கட்டுப்பாடுகளையும் மீறி செயற்பட்டுள்ளனர். 


இந்த நிலையில், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராகவும், தலைமைத்துவத்தின் விருப்பத்தை மீறியும் செயற்பட்ட மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் பொறுத்திருந்து பார்ப்போம்.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top