இப்படி சிந்திக்காதவரை எம் இதயங்களும் குப்பைத்தொட்டிதான்

0

 



SMZ. சித்தீக் (Chief Editor)


இலங்கையில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், கடந்த காலங்களில் பல டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை இலங்கை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளதுடன், 1,602 டெங்கு நோயாளர்கள் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்த்தில் மட்டும் 390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சென்ற வாரம், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கல்முனை மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து 


சம்மமாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலையின்  பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கவனிப்பாரற்று நீண்டகாலமாகமாக  தேங்கிக் கிடந்த குப்பைகளை இறக்காமம் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான ஏ.எல்.தாஹா செய்னுதின் (தொழிலதிபர்) எம்.ஏ.ஹுசையின் அவர்கள் மாணவர்களின் நலன்கருதி தானாக முன்வந்து 2022.12.13ம் திகதி குப்பைகளை அகற்றுவதை படத்தில்  காணலாம். 


இப்படி சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள்  சமூகத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும்  சுயமாக சிந்தித்து  முன்னின்று உழைக்காத வரை  எம் இதயங்களும் குப்பைத் தொட்டிதான்

 


 


 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top