இலங்கையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்! மீறுவோருக்கு மரண தண்டனை

0



ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இன்று (24.11.202) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த அக்டோபர் 19ஆம் திகதி இது தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

விஷ மற்றும் ஆபத்தான ஔடதங்கள் திருத்த சட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன நேற்று (23.11.2022) கையொப்பமிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்! மீறுவோருக்கு மரண தண்டனை | Death Penalty For Ice Drug Possession From Today

மரண தண்டனை

இதன்படி, ஐந்து கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்து குற்றவாளி என நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு 41ம் இலக்க விஷ மற்றும் ஆபத்தான ஔடதங்கள் சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு தண்டனை விதிக்கப்படவுள்ளது.

இலங்கையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்! மீறுவோருக்கு மரண தண்டனை | Death Penalty For Ice Drug Possession From Today

ஐஸ் போதைப்பொருள் இலங்கையில் கடந்த காலங்களில் பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் இந்த போதைப்பொருள் தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top