போதைப்பொருள் பயன்பாட்டினால்குடும்ப ரீதியில் பெண்கள்,சிறுவர்கள் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பில் கருத்தரங்கு..! ------------------

0

 



(எம்.என்.எம்.அப்ராஸ், நூருல் ஹுதா உமர்)


டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் குடும்பத்தில் பெண்கள், சிறுவர்கள் மத்தியில் தாக்கம் குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டளர்களுக்கான பயிற்சி பட்டறை கல்முனையில் இன்று (26) இடம்பெற்றது.




முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் மாவட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலா


இணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் வளவாளர்களாக சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் சுக்கூர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அம்பாறை மாவட்ட கணக்காளர் ஆர்.அனுஸ்கா உட்பட இளம் ஊடகவியலார்கள் பலர் கலந்து கொண்டனர்.





நிகழ்வின் இறுதியில் எதிர்கால நிகழ்வுகளை கருத்திற் கொண்டு இளம் ஊடகவியலாளர்கள் வலையமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top