கத்தார் போனவரைக்காணவில்லை தேடப்படுகிறார்

0

 

குடும்பத்தின் வறிய நிலை காரணமாக வேலைவாய்ப்புத் தேடி வீசா வழங்கும் ஓட்டமாவடியைச்சேர்ந்த முகவர் ஒருவரூடாக கத்தார் நாட்டிற்குச்சென்ற ஓட்டமாவடி, மீராவோடை-05, அரிசி மில் வீதியை பிறப்பிடமாகவும் மாஞ்சோலையில் திருமணம் முடித்திருந்த முஹம்மது சித்தீக் பயிஷர் என்பவரை அவரது மனைவி, ஐந்து வயதுக்குழந்தை ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாகத் தேடி வருகின்றனர். 


இவர் கடந்த 2018.02.13ம் திகதி கத்தார் சென்றுள்ளதுடன், அதன் பின்னர் இவரது எந்தத்தொடர்புகளும் கிடைக்கப்பெறவில்லை. 


இவருக்கு வீசா வழங்கிய முகவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இவர் பாவித்து வந்த  974 5575 1119 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தினாலும் இவர் பற்றிய எந்த விபரங்களையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் அங்கலாய்க்கின்றனர். 



திருமணமாகி இரண்டு மாதங்களில் கத்தார் நாட்டிற்கு வேலைவாய்ப்புக்குச்சென்ற நிலையிலேயே இவரது தொடர்புகள் இல்லாமல் போயுள்ளது. 


வயது முதிர்ந்த தந்தையும் மனைவி, பிஞ்சுக்குழந்தையும் இவரைத் தேடிக்கொண்டிருப்பதுடன், இவர் பற்றி விபரங்கள் தெரிந்தால் 94 77 3349053 எனும் அவரது மைத்துனரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.


தகவல் : எம்.சீ.றஜப் (MLT)

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top