கோட்டாபயவிற்கு நடக்கவிருப்பது என்ன - விசாரணைகள் சற்று முன்னர் ஆரம்பம்

0



ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, இலங்கையின் பிரஜையாக ஏற்றுக்கொள்வதை நிராகரிக்கும் உத்தரவை உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.


மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதியரசர் யசந்த கோதாகொட மற்றும் நீதியரசர் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Update :
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, இலங்கையின் பிரஜையாக ஏற்றுக்கொள்வதை நிராகரிக்கும் உத்தரவை உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்றுமுதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதியரசர் யசந்த கோதாகொட மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் கடந்த 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த மனுவின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, இந்த நீதியரசர்கள் குழாமில் மேலதிக நீதியரசராக மஹிந்த சமயவர்தன இணைக்கப்படுவதாக நீதியரசர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top