மகிந்த சகோதரர்களை விமர்சித்துவந்த, துமிந்த கோத்தாவுடன் இணைவு

0
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க இன்று பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக இன்று காலை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்றையதினம் அநுராதபுரத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து துமிந்த திசாநாயக்க கோத்தபாயவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும், அநுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் வாக்குக்களையும் கோத்தபாய ராஜபக்சவிற்கு பெற்றுக் கொடுத்து அவரை அமோக வெற்றியடையச் செய்வதாகவும் துமிந்த திசாநாயக்க இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியியில் இருக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை துமிந்த திசாநாயக்க கடுமையாக விமர்சித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top