வேன் மற்றும் டிப்பர் வாகனம் விபத்து... வேன் சாரதி பலி.

0


கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆனையிறவு தட்டுவங்கொட்டி பகுதியில்
இன்று (02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பயணி ஒருவரை ஏற்றி வந்த வேனொன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் வேன் சாரதியே உயிரிழந்துள்ளார். அத்தோடு குறித்த வேனில் பயணித்த பயணியே காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்குமாற்றப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையை சேர்ந்த 49 வயதுடைய ஆதிமூலம் பரமேஸ்வரன் எனும் சாரதியே விபத்தில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

thinakaran
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top