#மஹிந்த #ராஜபக்சவின் #அதிரடி #அறிவிப்பு

0

காலி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்ததுபோல எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பதிவுசெய்யும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் செய்துவந்த சேறுபூசல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு மக்கள் பதிலடி கொடுக்கின்ற சந்தர்ப்பம் உதயமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

காலி – எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்றதோடு அதில் 17 தொகுதிகளையும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக எல்பிட்டிய தேர்தலானது முதற்படியாகவே பார்க்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தெரிவித்து வந்த நிலையிலேயே பொதுஜன முன்னணி வெற்றியீட்டியது.

இந்த நிலையில், குருநாகல் – தம்பதெனிய பிரதேசத்தில் நேற்று இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெற்றதைப் போன்றே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top