சிறுவர்தின நிகழ்வில் மாணவர்களுக்கு ஒரு தொகை புத்தகப்பைகளை ௮ன்பளிப்பு

0

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது அதேவேளை சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வரிபதான்சேனை பிரதேசத்திலும் சிறுவர் தின நிகழ்வு வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் முகமாக வரிப்பதான்சேனை அஸ்சபா வித்தியாலயம் மற்றும் சேர் றாசிக் பரீட் முன்பள்ளி மாணவர்களுக்கும் வரிபதான்சேனைனை தேசிய காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் ஜனாதிபதி தொடர்பாடல் அதிகாரியுமான சட்டத்துறை மாணவன் எஸ்,எம், சபீகான் மற்றும் அக்கரைப்பற்ரை சேர்ந்த பிரபல தொழிலதிபர்  அப்துல் பாசித் மௌலானா அவர்களும் இணைந்து இவ் மாணவச் செல்வங்களுக்கு ஒரு தொகை புத்தகப்பைகளை வழங்கி வைத்தனர்.

 இந்நிகழ்வின் போதும் ரக்கம்ம பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top