தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறையில்
இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் ஒன்று, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லொறியில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த
நிலையில் ஜீப் வாகனத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த 4 பெண்கள் படுகாயமடைந்த நிலையில், நாகொடை, பண்டாரகம மற்றும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது,
பண்டாரகம மற்றும் நாகொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

