(கிழக்கிலே ஆகக் கூடுதலான வேலையில்லா பட்டதாரிகள் உள்ளார்கள் துரிதமாக வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் -பாராளுமன்றில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

0
ஊடகப் பிரிவு_

ஆகக் கூடுதலான வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கு மண்ணிலேயே இருக்கிறார்கள் இவர்களில் அதிகமானவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக உள்ளார்கள். இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (18) துறை முக விவாதம் தொடர்பான பேச்சின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் 

நாட்டில் வேலையில்லா பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புக்களை பல வழிகள் மூலமாக ஏற்படுத்திக் கொடுக்க முடியும் 
.திருகோணமலையில் உள்ள 101 எண்ணெய் தாங்கிகள் பயன்படுத்தப்படாமையாக உள்ளது இதனை பெற்றோலிய அமைப்பு ஐஓசியுடன் இணைந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றுவதனால் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களை பெறதகுதியுடையவர்களாக காணப்படுவார்கள்.

சபுஹஸ்கந்த முத்துராஜவெல பகுதியில் இவ்வாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது இவ்வாறு போன்று திருகோணமலையில் உள்ள வெற்றுத் தாங்கிகளை பயன்படுத்துவதால் கிழக்கில் உள்ள இளைஞர்கள் நன்மையடைவார்கள். திருகோணமலை துறை முகம் காங்கேசன் துறை  முகம்,அம்பாறை கரையோரம் ஊடான கப்பல் துறை போக்குவரத்தினை  ஏற்படுத்துவதனால் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் இதனால்  சுற்றுலாத் துறையும் அபிவிருத்திக்கு இட்டுச் செல்லப்படும் . 

காங்கேசன் துறை முகம் ஊடாக ராமநாதபுரத்துக்கு கப்பல் சேவையை ஏற்படுத்தி இந்தியாவில் அகதிகளாக உள்ள குடும்பங்கள் இதனால் சொந்த தாய் நாட்டுக்கு திரும்புவதற்காண வழி வகைகள் காணப்படுகிறது பெரும்பாலானவர்கள் இதனை விரும்புகிறார்கள் .ஒலுவில் துறை முகமும் மீனவத் துறை முகமாக மாற்றப்படும் இதனால் அங்குள்ள 21 ஆயிரம் மீனவக்குடும்பங்களும் நன்மையடைவார்கள்  கடந்த காலங்களில் துறை முக அபிவிருத்தியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 24 குடும்பங்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகைகளை வழங்கினோம் மிகுதியாக உள்ள குடும்பங்களுக்கும் நஷ்ட ஈட்டுத் தொகைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இருபது வருட காலமாக காணிகளை இழந்த மக்கள் இவ்வாறான தொகைகளை பெறுவதற்கு போராடி வந்த நிலையில் பிரதியமைச்சை பொறுப்பேற்றதன் பின்பே வழங்கப்பட்டது இதனை நிதி அமைச்சு,பிரதமர் அமைச்சர் ஊடாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி பெற்றுக் கொடுத்துள்ளேன். 

திருகோணமலையில் உள்ள அரசகாணிகள் அதாவது கப்பற் துறை அமைச்சுக்கு சொத்தமான காணிகளில் உள்ள சுமார் 3600 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் 2000 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளில் கைத்தொழில் பேட்டைகளையும் அமைப்பதற்கான சகல வசதிகளுடன் ஏற்படுத்தி வருகிறோம் இதில் எந்யவொரு பொது மக்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் .தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் ஊடாக பல அபிவிருத்திகள் திட்டமிடப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது  இதில் துறை முக அபிவிருத்தியும் தங்கியுள்ளது .

மூன்று வருட கால துரித அபிவிருத்தியில் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது இதனால் பல இளைஞர்களுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது.

ஈரான் மத்திய கிழக்கு யுத்தங்களால் பெற்றோலின் விலைச் சூத்திரங்கள் அதிகரித்துள்ள நிலையில் 2014 ம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தில் பெற்றோல் 119 ரூபாவும்,டீசல் 140;ரூபாவும், மண்ணெண்ணெய் 110 ரூபாவும் காணப்பட்டது .

தற்போதைய சூத்திர நிலையில் 136,104, மண்ணெண்ணெய் 80 ரூபாவாக மாறியுள்ளது .

இந்த அரசாங்கம் மூலமே நாட்டை சிறந்ததொரு பாதைக்கு இட்டுச் செல்ப்படுவதை அறிய முடிகிறது அபிவிருத்திகளில் இவ்வாறாக பல திட்டங்களை மேலும் முன்வைத்து செயற்படுத்தினால் நல்லதொரு நாடாக எம்மால் மாற்ற நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்றார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top