கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின்போது, 52 நாட்களில் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கியதை போன்று, எதிர்வரும் 52 நாட்களில் ( நவம்பர் 16ஆம் திகதிவரை) சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவியில் அமர வைப்பதற்காக கடுமையாக உழைப்போம் என, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
களுத்துறை, மத்துகமவில் நேற்று (25) இடம்பெற்ற அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

