பாகிஸ்தானில் காணாமல் போயிருந்த சிறுவர்களில் மூவர் ஜனாசாக்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரிலிருந்து 52 கிலோமீ;றறர் தூரத்திலுள்ள கசூர் மாவட்டத்தல் நேற்று முன்தினம் இந்த ஜனாசாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இச்சிறுவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என உடனடியாக தெரியவில்லை.
ஆனால், இவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கசூர் மாவட்ட பொலிஸ் அதிகாரி அப்துல் கபார் கைஸ்ரானி தெரிவித்துள்ளார்.
இச்சிறுவர்கள் 8-10 வயதுக்குட்பட்டவர்களாகவர். கடந்த ஜுன் மாதத்திலிருந்து 12 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் காணாமல் போயிருந்தனர்.
அவர்களில் மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கசூர் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்

