இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹர்புர்வா பகுதியில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், கடுமையாக பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதேநேரம், மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த பகுதியில் கடும் மழை பெய்து பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலியாகினர்.
குறித்த படகில் 20 பேர் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கிய ஏனையோரை மீட்கும் பணிகள் முன்னெக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

