ஜனாதிபதியின் குடும்பத்தினால், எனக்கு கொலை அச்சுறுத்தல் - பாராளுமன்றத்தில் ரொஷான் Mp முறையீடு

0
“ எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கிறது ஜனாதிபதியின் குடும்பம். ஜனாதிபதி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். சபாநாயகர் இதில் தலையிட்டு எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்…”

இவ்வாறு இன்று .12. பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது கோரிக்கை விடுத்தார் பொலனறுவை மாவட்ட எம் பி ரொஷான் ரணசிங்க. சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பி அவர் மேலும் கூறியதாவது ,

எனது அரசியல் வாழ்வுக்கு ஜனாதிபதி தரப்பு கடும் அழுத்தங்களை வழங்குகிறது. பொலனறுவை பொலிஸார் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றனர். நான் ஒரு பிஸ்டலை கூட வைத்துக் கொண்டதில்லை. ஆனால் பொய்க் காரணங்களை காட்டி என் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. என்னை கொல்வதாக பல தடவை எனக்கு பலர் ஊடாக தகவல் கூறியுள்ளனர்.

சி ஐ டி சென்று முறையிட்டால் அது தமக்குரிய பொறுப்பில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஒரு எம் பிக்கே இந்த பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பை வழங்க முடியும்.? ஜனாதிபதி தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம் பி ஒருவர் கொல்லப்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை – என்றார் எம் பி.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top