முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து

0

முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
உலகக் கோப்பை 2019க்கான இந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில், இன்று (9) விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் 5 முதல் 10-வது இடங்களை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top