வட்ஸ் அப் - டெலிகிராம் பயன்படுத்துவோர் அவதானம்...!

0

வட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆகிய செயலிகளூடாக மேற்கொள்ளப்படும் தகவற் பரிமாற்றம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகளின் பாதுகாப்புக் கட்டமைப்பில் குறைபாடு அவதானிக்கப்பட்டதையடுத்தே, இணையப் பாதுகாப்பு அமைப்பொன்றினால்  இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆகிய செயலிகளில், பயனாளருக்குத் தெரியாமல், சட்டவிரோத ஊடுருவிகள் தரவுகளை மாற்றக்கூடிய நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த செயலிகளூடாகப் பகிரப்படும் ஊடகக் கோப்புகளே இதனால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த செயலிகளூடாக பயணாளர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் தனிப்பட்ட தகவல்கள், சட்டவிரோத ஊடுருவிகளால் தவறாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக, குறிப்பிட்ட இணையப் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top