கைது செய்யப்பட்ட இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப் பட்டது.

0



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ

 மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை   எதிிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதேவேளை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு, சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலுமே கைது செய்யப்பட்டனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top