யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் முருத்தானை வேப்பையடி எனும் பிரதேசத்தில் நேற்றும் இன்றும் யானை தாக்கியதில், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொண்டயன்கேணி மற்றும் கிண்ணயடி பிரதேசங்களை சேர்ந்;த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்றையதினம் (05) யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, கிண்ணயடி பிரதேசத்தை சேர்ந்த குணரத்தினம் கிரிதர்சன் (26) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் (04) யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, கொண்டயன்கேணி பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்மி கந்தசாமி (52) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மேலும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் முருத்தானை வேப்பையடி பிரதேசத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top