மஹானாம, பியதாசவுக்கு குற்றப்பத்திரிகையின் பின் பிணை

0

ஜனாதிபதி பணிக்குழாமின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ரூபா 2 கோடி (ரூ. 20 மில்லியன்) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவர்களுக்கு எதிராக மூவரடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்  குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
தலா ரூபா ஒரு 5 இலட்சம் ரொக்கம் மற்றும் ரூபா 10 இலட்சம் கொண்ட சரீரப் பிணைகள் மூன்றின் அடிப்படையில் அவர்களுக்கு பிணை வழங்க மூவரடங்கிய  நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
பிரதிவாதிகளின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்த நீதிமன்றம் அவர்களின் கடவுச்சீட்டுகளை மன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதமளவில், கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான இரும்புகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பில் ரூபா 54 கோடியை இலஞ்சமாக பெறுவதற்கு முயன்றுள்ளதோடு, அதற்கான முற்பணமாக ரூபா 2 கோடி பணத்தை, கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வாகன தரிப்பிடத்தில் வைத்து கைமாற்றிய போது, இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top