கார் - மோட்டர் சைக்கிள் விபத்து

0


(.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்கப் பகுதியில் 16.07.2019 அன்று மாலை 6.30 மணியளவில் கார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும்  கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் நுவரெலியா -7 பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து பதுளை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியும், அவரின் நண்பரும் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், மோட்டர் சைக்களின் சாரதி மோட்டர் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top